Kataragama Pada Yatra in Yala 2015
 
Vel, Murugan's weaponKataragama Devotees Trust logo in English, Sinhala and Tamil

2006 கதிர்காம பாதயாத்திரை ஜூன் 25 இல் வெருகலில் ஆரம்பம்

வீரகேசரி 18-06-2006 ஞாயிற்றுகிழமை

Pada Yatra pilgrims set out from Verugal Chitra Vel Ayudha Swami Kovil in 2005
Pada Yatra pilgrims set out from Verugal Chitra Vel Ayudha Swami Kovil in 2005.
Pada Yatra pilgrims setting out from Verugal Murugan Kovil cross the Verugal River in 2005
Pada Yatra pilgrims setting out from Verugal Murugan Kovil cross the Verugal River in 2005.
Pada Yatra pilgrims walking from Verugal approach Kathirveli in 2005
Pada Yatra pilgrims walking from Verugal approach Kathirveli in 2005.

Veerakesari (Colombo) article of June 18, 2006

கதிர்காம பாதயாத்திரை ஜூன் 25 இல் வெருகலில் ஆரம்பம் மண்டூர்.

கதிர்காம அடியார்கள் தர்ம நிலையத்தினரின் ஒரு மாத கதிர்காம பாதயாத்திரை எதிர்வரும் 25ஆம் திகதி வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை காலமும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி மூருகன் கோயிலில் இருந்து ஆரம்பமான இப் பாத யாத்திரை இம்முறை வெருகலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

யோகர் சுவாமிகளின் சீடரான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கௌரிபாலகிரியினால் 1949ஆம் ஆண்டில் கதிர்காம பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது அதனைத் தொடாடந்து 1988 ஆம் ஆண்டில் மேற்படி தர்ம நிவையம் ஆரம்பிக்கபட்டு வருடா வருடம் கதிர்காம பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேற்கு நாட்டவரான பற்ரிக்ககரிகன் இந்நிலையத்தின் தலைவராக இருந்து பாத யாத்திரைக்கும் தலைமை தாங்கிச் செல்கின்றார். எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் பாத யாத்திரை கதிர்காமம் கொடியேற்ற தினமான ஜூலை மாதம் 25 ஆம் திகதி கதிர்காமத்தைச் சென்றடையும்.

வழியிலுள்ள 30 தலங்களைச் தரிசித்துச் செல்லும் பாத யாத்திரையினர் அவற்றுள் முக்கியமான தலற்களில் தங்கியும் செல்வர். வழிகளில் உள்ள அடியார்களும் இவர்களுடன் இணைந்து கொள்வர்.

சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி கோயில்இ செங்கலடி சிவ தொண்டன் ஆச்சிரமம்இ அமிர்தகழி மாமாங்கோஸ்வரர் ஆலயம்;இ கொக்கொட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்இ மண்டூர் முருகன் ஆலயம்இ பாண்டிருப்பு துரோபதை அம்பாள் ஆலயம் இ திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இஆகிய பிரசித்தி பெற்ற தலங்களைத் தரிசித்து வாகர வட்டைஇகுமணைஇநாசலடிஇ யாலஇவள்ளியம்மன் ஆறுஇகடடகாமம் வழியாக கதிர்காமத்தை அடையும்.

பாதயாத்திரையில் பங்கு கொள்பவர்கள் ஆண்கள் மேலாடை இன்றி வேட்டியும் பெண்கள் சேலையும் அணிதல் வேண்டும். அத்துடன் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களின் ஆலோசனையையும் பின்பற்றுதல் வேண்டும். மதுபானம் அருந்துபவர்களும் ஒழுக்கக் கோடாக நடந்து கொள்பவர்களும் பாதயாத்திரையிலிருந்து நீக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2005 Kataragama Pada Yatra
Kataragama.org